பாகிஸ்தானின் சட்டமன்ற இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த அதிபரின் மகள்
சிந்து மாகாணத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அசீபா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.;
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் 14-வது அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்றார். பாகிஸ்தான் அரசியலமைப்பின்படி அதிபரின் மனைவி முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை பெறுவார். ஆனால் இவரது மனைவி பெனாசிர் பூட்டோ தற்கொலைப்படை தாக்குதலில் கடந்த 2007-ம் ஆண்டு பலியானார்.
இதனால் பாகிஸ்தான் முதல் பெண்மணிக்கு அவரது இளைய மகள் அசீபா பூட்டோவை (வயது 31) நியமனம் செய்ய உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிந்து மாகாணத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அசீபா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன்மூலம் அவர் தீவிர அரசியலில் குதித்துள்ளார்.
அசீபா பூட்டோ, தனது தந்தையான ஆசிப் அலி சர்தாரியால் காலியாகி உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியான ஷஹீத் பென்சிராபாத் மாவட்டத்தின் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ததன் மூலம் நாட்டின் பரபரப்பான அரசியலில் இணைந்துள்ளார்.