சிங்கப்பூரில் நடுவானில் விமானம் குலுங்கியதால் 7 பேர் படுகாயம்
படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்கு டி.ஆர்-100 என்ற விமானம் புறப்பட்டது. ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் குவாங்சூ நகர் அருகே சென்றபோது பயங்கரமாக குலுங்கியது. அப்போது பயணிகள் அருகில் உள்ள இருக்கை மீது மோதினர். இதில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர்.
இதனையடுத்து அந்த விமானம் குவாங்சூ விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதற்கிடையே மீட்பு குழுவினர் அங்கு தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். மேலும் படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது. எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.