தெற்கு சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

தெற்கு சாண்ட்விச் தீவில் இன்று மாலை ரிக்டரில் 6.0 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.;

Update: 2025-01-02 16:24 GMT

சாண்ட்விச் தீவு,

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தெற்கு சாண்ட்வீச் தீவு அமைந்து உள்ளது. இந்த தீவில் இன்று காலை 8.33 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 95 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், 56.29 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 93.34 டிகிரி மேற்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. தெற்கு ஜார்ஜியா தீவில் இருந்து 470 மைல்கள் தொலைவில் இந்த தீவு அமைந்து உள்ளது.

எனினும் நிலநடுக்கம் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்களும் உடனடியாக வெளிவரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்