மேகங்கள் மீது நின்ற ஏலியன்கள்? வீடியோ வைரல்
அந்த உருவம் வேற்றுக்கிரக வாசிகள் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.;
வாஷிங்டன்,
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் செல்போன் பயன்படுத்தப்படும் நிலையில் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக எது வித்தியாசமாக நடந்தாலும் உடனே வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுவிடுகிறார்கள். அது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இந்நிலையில் ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் நிலையில் தற்போது மேகங்களில் மனிதர்கள் போன்ற சில உருவங்கள் நிற்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேகங்களில் நிற்பவர்கள் ஏலியன்கள் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ விமானத்தில் செல்லும்போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் மேகங்களில் ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று பேர் நிற்கிறார்கள். அவர்களை ஏலியன்கள் என்று கூறும் நிலையில் அதற்கான எந்த ஒரு சான்றுகளும் இல்லை. இருப்பினும் பயனர்கள் இது ஏலியன்கள் என்று கருத்துக்களை பதிவிடுவதால் இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.