துருக்கியில் தேவாலயத்தை குறிவைத்து துப்பாக்கி சூடு - 3 பேர் கைது
தாக்குதல் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
அங்காரா,
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. அந்த வழியாக சென்ற காரில் இருந்த நபர்கள் தேவாலயத்தை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அங்கிருந்த சங்க கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது.
எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதல் தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.