அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.;
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். பதவியேற்பு விழா வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதன்படி வரும் 19ம் தேதி வாஷிங்டன் மாகாணத்தில் இந்த பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். பேரணி, பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி வாஷிங்டன் மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.