அமெரிக்காவில் நைட் கிளப்பில் துப்பாக்கி சூடு- 10 பேர் காயம்

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2025-01-02 08:43 GMT

நியூயார்க்:

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கிளப்புகள் போன்ற பொது இடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரபல நைட் கிளப்பில் (இரவு விடுதி) நேற்று இரவு துப்பாக்கி சூடு நடந்தது. கிளப்பிற்கு வெளியே நின்றிருந்தவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக சுட்டதில் 10 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்