டோங்கா நாட்டில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

டோங்கா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2024-06-18 15:35 IST

நுலுலபா,

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.

இந்நிலையில், டோங்கா தீவின் ஹிஹிபா நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான ஹிஹிபா நகரில் இருந்து தென்மேற்கே 87 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு டோங்கா தீவில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்