உக்ரைனில் ரஷிய தாக்குதலில் 24 பேர் பலி

உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலியாகினர்.;

Update:2022-10-02 02:30 IST

கோப்புப்படம்

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 7 மாதங்களாக போர் தொடுத்து வரும் நிலையில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த ரஷிய அதிபர் புதின் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

அதோடு உக்ரைனில் சண்டையிடுவதற்காக 3 லட்சம் ரஷியர்களை அணி திரட்டுவதற்கான ஆணையிலும் அவர் கையெழுத்திட்டார். அதன்படி உக்ரைன் நகரங்கள் மீதான தாக்குதல்களை ரஷிய படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைனின் கார்கீவ் பிராந்தியத்தில் உள்ள குபியன்ஸ்கி நகரை சேர்ந்த மக்கள் ரஷிய படைகளின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க அண்டை நகரை நோக்கி கார்களில் அணி வகுத்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்கின. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

முன்னதாக நேற்று முன்தினம் ஜாபோர்ஜியா பிராந்தியத்தில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்த பிராந்தியத்தில் நுழைவதற்காக கார்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் 25 பேர் கொன்று குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்