டெக்சாஸில் உள்ள கடற்கரை பூங்காவில் நடைபாதை சரிந்ததில் 21 பேர் படுகாயம்
யாருக்கும் உயிருக்கு ஆபத்தான அளவிற்கு காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.;
டெக்சாஸ்,
அமெரிக்காவின் டெக்சாஸின் சர்ப்சைட் கடற்கரையில் பூங்கா உள்ளது. கடலோர காட்சிகளை ரசிக்கக்கூடிய கடலோர பொழுதுபோக்கு பகுதியான ஸ்டால்மன் பூங்காவுக்கு பலர் வருகை தருவதுண்டு.
இந்த நிலையில், நேற்று ஒரு உயரமான நடைபாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். யாருக்கும் உயிருக்கு ஆபத்தான அளவிற்கு காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.