ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு - 4 பேர் பலி
ஈராக்கில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 4 பேர் பலியாகினர்.;
பாக்தாத்,
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா களம் இறங்கியது. இதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பெரும் பின்னடைவை சந்தித்தது. பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டு, அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
இதையடுத்து, ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் அந்நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் தற்போது, ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு மீண்டும் காலூன்றி தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், தலைநகர் பாக்தாத்தில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள கிர்குக் நகரில் பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி அதிர வைத்தனர். அங்குள்ள 3 முக்கிய வீதிகளில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த 6 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.
இந்த தொடர் குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ்காரர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.