அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் குரங்கம்மை-31 குழந்தைகள் உட்பட 18,989 பேர் பாதிப்பு
அமெரிக்கா முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது.;
வாஷிங்டன்,
கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்றை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவில் 11 மாகாணங்களைச் சேர்ந்த 31 குழந்தைகள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் டெக்சாஸ் மாகாணத்தில் குரங்கம்மையால் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.