ஜாபர் சாதிக் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

டெல்லி போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் சிக்கிய நிலையில், கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2024-02-25 11:42 GMT

சென்னை,

தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்