தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
அருப்புக்கோட்டையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ெரயில்வே பீடர் ரோடு முகில் நகரைச்சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பாலாஜி (வயது 29). இவரது மனைவி ராஜலட்சுமி (28). பாலாஜி முதலீடு செய்த ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் அடைந்ததால், அதனை சரி செய்வதற்கு தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று அதனை கட்ட முடியாமல் திணறி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.