செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு ஏன்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

செம்பரம்பாக்கம் ஏரியில் நீரை குறைக்காவிட்டால், கரை உடைந்து ஆபத்து ஏற்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-15 06:06 GMT

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் ஆற்றோரம் வசிக்கும் முதியவர்களுக்கு அரிசி, பெட்ஷீட் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பதற்கான காரணம் குறித்து அவர் பேசியதாவது;

ஏரிகளை திறப்பதில் முதல்-அமைச்சர் மிகவும் கவனமாக இருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடி உயரத்தில், 23.42 அடி உயரம் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. வருகிற 17-ம் தேதி பெரிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீரை குறைக்காவிட்டால், கரை உடைந்து ஆபத்து ஏற்படக்கூடும். நீரை குறைப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு 22 அடியாக குறைந்து விடும். 17ம் தேதி மழை வந்தால் 2 அடி உள்வாங்கி குடிநீருக்கு நிரம்பி இருக்கும் இதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை."

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார் 

Tags:    

மேலும் செய்திகள்