தாம்பரம்-கோவை வாராந்திர சிறப்பு ரெயில் பிப்ரவரி வரை நீட்டிப்பு

தாம்பரம்-கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.;

Update:2024-12-15 08:32 IST

கோவை,

சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம்-கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாராந்திர ரெயில் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் தாம்பரம்-கோவை வாராந்திர ரெயில் (எண்: 06184) மறுநாள் காலை 8.10 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் கோவை-தாம்பரம் வாராந்திர ரெயில் (எண்: 06185) மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்