தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
சாயல்குடி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சாயல்குடி,
சென்னை பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 34). இவர் சென்னையில் தொழில் செய்து வந்துள்ளார். அதில் அதிக கடன்பட்டதால் தனது மனைவி கார்த்திகாதேவி ஊரான சாயல்குடி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்திற்கு வந்தார். அங்கு கடந்த 2 மாதமாக மனைவியுடன் தங்கி உள்ளார். தனது ஒரு வயது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் அதற்கும் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். தொழிலும் இல்லாமல் கடன் அதிகமாக இருந்ததால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா அவரது உடலை கைப்பற்றி கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து சாயல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.