புழல் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர சோதனை

புழல் மத்திய சிறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Update: 2024-12-14 16:10 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் புழல் மத்திய சிறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து புழல் சிறை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

மிரட்டல் விடுத்த நபரை செல்போன் சிக்னல் மூலம் கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பலகட்ட சோதனைக்கு பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்படும் சூழலில், வெடிகுண்டு எடுத்துச் செல்ல வாய்ப்பில்லை என்றும் இது போலி மிரட்டலாக இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்