தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

திருவாடானை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-12 18:45 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா தளிர் மருங்கூர் இந்திரா நகர் காலனி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகரெத்தினம். இவருடைய மகன் ஜெயச்சந்திரன் (வயது 19). கொத்தனார். இவருடைய மனைவி காவியா(23). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட னர். இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயச்சந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தொண்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்