தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-26 19:47 GMT

காரியாபட்டி

திருச்சுழி அருகே உள்ள கீழக்கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 29). இவர் சொந்தமாக ஜே.சி.பி. வைத்து தொழில் செய்து வந்தார். இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்