சிதம்பரத்தில் வறுமையால் வாலிபர் தற்கொலை

சிதம்பரத்தில் வறுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-23 18:45 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள முத்து மாணிக்க நாடார் தெருவை சேர்ந்தவர் காசிநாதன். இவருக்கு தமிழழகன் (வயது 25), கலைவாணன் (24) என்ற 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் சிறு வயதாக இருக்கும் போதே காசிநாதன், எங்கேயோ சென்று விட்டார். இதற்கிடையே தமிழழகனின் தாய்க்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்ணன்-தம்பி இருவருக்கும் சரிவர வேலை கிடைக்காததால், குடும்பமே வறுமையில் வாடியதாக தெரிகிறது. இதனால் தமிழழகன், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

பாலில் விஷம்

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் வைத்து பாலில் விஷம் கலந்து குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழழகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கலைவாணன், சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்