போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சங்கரன்கோவில் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்சாமி மகன் துரை (வயது 25). கூலி தொழிலாளியான இவர், இளம்பெண்ணிடம் காதலிக்கும்படி கூறி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் உறவினர்கள் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, துரையை கைது செய்தனர்.