பெண்ணிடம் நிலத்தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது
ஜெயங்கொண்டத்தில் பெண்ணிடம் நிலத்தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம் கிழக்கு அண்ணா நகரை சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி சுவிதா (வயது 46). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கதுரை மகன் பூமிநாதன் (25) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சுவிதா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணராமன் வழக்குப்பதிவு செய்து பூமிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.