மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டன.

Update: 2022-08-25 18:29 GMT

கரூர் பசுபதிபாளையம் தெற்கு தெருவை மாரிமுத்து (வயது 58). இவர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், மோட்டார் சைக்கிளை திருடியது திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்