பணம் திருடிய வாலிபர் கைது

பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-02 19:24 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் சத்யாமோகன் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறர். இந்த பெட்ரோல் பங்கில் 2 மர்ம நபர்கள் புகுந்து ெசல்போன் மற்றும் ரூ.1,09,600-யை திருடி சென்றனர். இதுகுறித்து பெட்ரோல் பங்கின் மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின் பெயரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த கார்த்திக் பாண்டி (எ) குண்டு கார்த்திக் (வயது23) என்பவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்