மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-03 19:07 GMT

ரோசனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் கமிட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டிவனம் ரோஷனை பேட்டை அஸ்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகமது அலி (வயது 24)என்பதும், 144 மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்