1¼ கிலோ கஞ்சா விற்ற வாலிபர் கைது

1¼ கிலோ கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-05-12 00:13 IST

அரிமளம் அருகே கே.புதுப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு தனிப்படை போலீசார் அரிமளம், கே.புதுப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கே.புதுப்பட்டி உப்பு மண்டி ஊரணி பகுதியில் சந்தேகத்தின் பேரில், சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அப்பகுதியில் கஞ்சா விற்றதும், கே.புதுப்பட்டி ஏம்பல் ரோடு அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த கலைச்செல்வம் மகன் நவீன் குமார் (வயது 33) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 1.20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்