சாராயம் பதுக்கிய வாலிபர் கைது

சின்னசேலம் அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-26 19:58 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே வீரபயங்கரம் பகுதியில் கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட்மனோ தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதேபகுதியை சேர்ந்த அருள்மணி (வயது 35) என்பவர் தனது கரும்பு வயலுக்குள் 15 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அருள்மணியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்