தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-08 19:08 GMT

தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவர் சென்னையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (வயது 45). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வரும் அண்ணாதுரை மகன் ஆனந்த் (22) என்பவர் மதுபோதையில் ரேவதி வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரேவதியின் உறவினரும், தொழிலாளியுமான பசுபதி (42) ஆனந்த்திடம் விசாரித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பசுபதியின் கையில் வெட்டியுள்ளார். மேலும் இதனை தடுக்க வந்த ரேவதியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவரது தலையில் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் ஆனந்த் அங்கிருந்து சென்று விட்டார்.

இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த பசுபதி மற்றும் ரேவதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த சம்பவம் குறித்து ரேவதி அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து ஆனந்த்தை கைது செய்தார். பின்னர் அவரை ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த்தை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்