கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-12 18:45 GMT

மயிலம், 

மயிலம் அருகே விளங்கம்பாடி அய்யனாரப்பன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர் திருடிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கீழ்எடையாளம் கிராமத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன் (வயது 19), என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அய்யனாரப்பன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. மேலும் அவர் கீழஎடையாளத்தில் உள்ள ஜெயின் கோவில் உண்டியலையும் உடைத்து பணம் திருடியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்