பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-30 18:28 GMT

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி வாலிபர் ஒருவர் நுழைந்து கலெக்டர் அலுவலகத்தின் தரைதளத்தில் வரவேற்பு பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க பணிகள்- திட்ட செயலாக்கம் குறித்த புகைப்படங்கள் வைத்திருந்த காட்சி அமைப்பின் கண்ணாடியை கட்டையால் உடைத்து சேதப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்