தொழிலாளியை கல்லால் தாக்கிய வாலிபர் கைது
தொழிலாளியை கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கண்டமனூரை சேர்ந்த முத்துவேல் மகன் ஹரிஹரன் (வயது 20). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தேனி அருகே தோப்புப்பட்டியில் உள்ள தனது தாத்தா தங்கவேலு வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் கூலித்தொழிலாளி ஒருவரின் மனைவி தனது வீட்டில் துணியை காயப்போட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது ஹரிஹரன் தனது ஆடையை விலக்கிக் கொண்டு அந்த பெண்ணை பார்த்து அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அந்த பெண் தனது கணவரிடம் கூறினார். இதையடுத்து அவர் இந்த செயலை தட்டிக் கேட்டார். அப்போது அவரை ஹரிஹரன் கல்லால் தாக்கி காயப்படுத்தினார். மேலும், ஹரிஹரனின் தாத்தா தங்கவேலு அந்த பெண்ணை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளி புகார் செய்தார். அதன்பேரில், ஹரிஹரன், தங்கவேலு ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர்.