சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
தேனி அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வீரபாண்டியை சேர்ந்த 18 வயது வாலிபரும், 15 வயது சிறுமியும் உறவினர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர், சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துகொண்டார். இதற்கு வாலிபரின் தந்தை, தாய் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய், வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.