இளம்பெண் சாவு

சிநேகா உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாகவும், அவரை சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து சென்ற நிலையில் இறந்ததாகவும் கூறப்படுகிறது;

Update: 2022-12-20 20:18 GMT

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி சிநேகா (வயது 21). இவர்களுக்கு கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் கந்தசாமி வெளிநாடு சென்று விட்டார். சிநேகா உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாகவும், அவரை சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து சென்ற நிலையில் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கோகிலாதேவி கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் போலீசார், சிநேகாவின் உடலை பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிநேகாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இதுகுறித்து தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை விசாரித்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்