மாணவர்களுக்கு யோகாபயிற்சி

பாணாவரத்தில் மாணவர்களுக்கு யோகாபயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-10-28 18:17 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் உடல் ஆரோக்கியம், மன வலிமை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிங்கும் வகையில் யோகாசன பயிற்சி நேற்று மாலை பள்ளி வளாகத்தில் நடந்தது. யோகா பயிற்றுனர் சுவாமிநாதன் தலைமையில், பள்ளி ஆசிரியர்கள் சிவராமகிருஷ்ணன், விஸ்வநாதன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஹெலன் பிரபு ஆகியோர் முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கை பயிற்சி, கால் பயிற்சி, கண் பயிற்சி, தசை நார் பயிற்சி மற்றும் தாடாசனம், ஏகபாதாசனம், வஜ்ராசனம், பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்