ஏற்காடு விபத்து - இழப்பீடு வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

ஏற்காடு பேருந்து விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவோரை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.;

Update:2024-05-04 11:47 IST

சேலம்,

ஏற்காடு பேருந்து விபத்தில் காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

ஏற்காடு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்