கனகவல்லி தாயாருக்கு மஞ்சள் காப்பு அலங்காரம்
கரதூஷ்ணபெருமாள் கோவிலில் மார்கழி அமாவாசையையொட்டி கனகவல்லி தாயாருக்கு மஞ்சள்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சேத்துப்பட்டு
கரதூஷ்ணபெருமாள் கோவிலில் மார்கழி அமாவாசையையொட்டி கனகவல்லி தாயாருக்கு மஞ்சள்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சேத்துப்பட்டு தாலுகா பெரிய கொழப்பலூர் கிராமத்தில் உள்ள கரதூஷ்ண பெருமாள் கோவிலில் மார்கழி அமாவாசை முன்னிட்டு கனகவல்லி தாயாருக்கு மஞ்சள் காப்பு அணிவிக்கப்பட்டது. முன்னதாக கரதூஷ்ண பெருமாள், சக்கரத்தாழ்வார், பூதேவி, ஸ்ரீதேவி, பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.இதேபோல் கனகவல்லி தாயார் மூலவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவை மூலம் திருமஞ்சனம் செய்யப்பட்டு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தாமரை பூ, துளசி மற்றும் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்து லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அப்போது கோவிந்தா, நாராயணா, கோபாலா, ஏழுமலையானே என பக்தர்கள் முழங்கினர். மாலை 6 மணிக்கு சுமங்கலி பெண்கள் எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் கோவில் சார்பாக நெய்வேத்தியம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பெரியகொழப்பலூர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர், அ.தி.மு.க. மூத்த உறுப்பினர் கே.கோபால் குடும்பத்தினர் செய்திருந்தனர்.