ராஜாக்கமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் ஜெராக்ஸ் கடை பெண் ஊழியரிடம் 7 பவுன் சங்கிலி அபேஸ்
ராஜாக்கமங்கலம் அருகே ஓடம் பஸ்சில் ஜெராக்ஸ் கடை பெண் ஊழியரிடம் 7 பவுன் சங்கிலி அபேஸ் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே ஓடம் பஸ்சில் ஜெராக்ஸ் கடை பெண் ஊழியரிடம் 7 பவுன் சங்கிலி அபேஸ் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் ஊழியர்
ராஜாக்கமங்கலம் அருகே அனந்த நாடார்குடி பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஜெயபால். இவருடைய மனைவி சுனிதா (வயது 38).
இவர் அம்மாண்டி விளை அருகே ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் அனந்த நாடார் குடியில் இருந்து வேலைக்கு பஸ்சில் செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்று காலை 8.45 மணியளவில் சுனிதா பஸ்சில் ஏறினார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது.
7 பவுன் சங்கிலி அபேஸ்
பஸ் ராஜாக்கமங்கலம் ஜங்ஷன் அருகே வந்த போது சுனிதா கழுத்தை பார்த்த போது 7 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. பஸ்சில் நின்ற இடத்தில் தேடிப் பார்த்தும் தங்கசங்கிலி கிடைக்கவில்லை. பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ 7 பவுன் தங்க சங்கிலியை அபேஸ் செய்து சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி சுனிதா ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் பக்கத்திலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து நகையை அபேஸ் செய்து சென்றவரை தேடி வருகிறார்கள்.