கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 3,342 பேர் எழுதினர்

நெல்லை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வை 3,342 பேர் எழுதினார்கள்.

Update: 2022-12-04 18:45 GMT

நெல்லை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வை 3,342 பேர் எழுதினார்கள்.

எழுத்து தேர்வு

வருவாய் துறையில் கிராம உதவியாளர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் 60 கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த தேர்வுக்கு 4,390 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களுக்கு தாலுகா வாரியாக நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது.

நெல்லை தாலுகாவுக்கு டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் 815 பேரும், பாளையங்கோட்டை தாலுகாவுக்கு சேவியர் கல்லூரியில் நடந்த தேர்வில் 553 பேரும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

3,342 பேர்

இதேபோல் மானூர் தாலுகாவில் 276 பேர், அம்பை தாலுகாவில் 237 பேர், சேரன்மாதேவி தாலுகாவில் 228 பேர், நாங்குநேரி தாலுகாவில் 614 பேர், ராதாபுரம் தாலுகாவில் 401 பேர், திசையன்விளை தாலுகாவில் 218 பேர் கலந்து கொண்டு எழுதினர். மாவட்டத்தில் மொத்தம் 3,342 பேர் தேர்வு எழுதினார்கள். 1,048 பேர் தேர்வு எழுத வரவில்லை.

காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளை வருவாய் துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்