நில அளவர், வரைவாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நில அளவர், வரைவாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
அண்ணாமலை நகர்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நில அளவை பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நில அளவர் மற்றும் வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர், உதவி வரைவாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இத்தேர்வு கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலைநகரில் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலம், கல்வியியல் புலம் மற்றும் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் நடந்தது. இத்தேர்வு எழுத 2,870 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில் 1,794 பேர் மட்டும் தேர்வு எழுத வந்திருந்தனர். 1,076 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.