சித்தாம்பூர் சாய்பாபா கோவிலில் வழிபாடு
சித்தாம்பூர் சாய்பாபா கோவிலில் வழிபாடு
கூத்தாநல்லூர் அருகே உள்ள சித்தாம்பூரில் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. இதில் சாய்பாபாவுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாய்பாபா வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.