உலக புகைப்பட தின கண்காட்சி

உலக புகைப்பட தின கண்காட்சி நடைபெற்றது.

Update: 2023-08-18 19:33 GMT

சிவகாசி, 

சிவகாசியில் போட்டோ மற்றும் வீடியோ கிராபர்ஸ் நலச்சங்கம் சார்பாக உலக புகைப்பட தின கண்காட்சி நடைபெற்றது. இதில் அசோகன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தனர். புகைப்பட கலை கடந்து வந்த பாதை என்பதை வலியுறுத்தும் விதமாக சுதந்திர காலத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த கேமராக்களிலிருந்து இன்றைய விஞ்ஞான உலகில் பயன்படுத்தப்படும் நவீன மயமாக்கப்பட்ட புகைப்பட மற்றும் வீடியோ கேமராக்கள் வரை அனைத்து வகையான கேமராக்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில் உங்கள் பார்வையில் சிவகாசி என்ற தலைப்பில், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு புகைப்பட போட்டி நடைபெற்றது. சிறந்த புகைப்படங்கள் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. புகைப்பட கேமராக்களின் கண்காட்சியை பார்வையிட வந்த மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்