உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

விழுப்புரத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-12-04 18:41 GMT

விழுப்புரம், 

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். தொடர்ந்து, அவரது தலைமையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு ஆதரவு கையெழுத்திடுதலையும், ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டியும், பேரணி மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளையும் கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக 10,948 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 8,093 பேர் கூட்டு மருந்து சிகிச்சையை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட சட்ட உதவி மையத்தின் மூலம் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்பவர்களுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக 2,678 பேருக்கு காப்பீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இவ்விழாவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, குடும்ப நல இணை இயக்குனர் (பொறுப்பு) மணிமேகலை, துணை இயக்குனர் (காசநோய்) சுதாகரன், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டு மருந்து சிகிச்சை மைய மருத்துவ அலுவலர் ரவிராஜா, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் பிரேமா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி ஆலோசகர் அசோக்குமார் நன்றி கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

அதனை தொடர்ந்து உலக எய்ட்ஸ் தின நலத்திட்ட உதவிகள் வழங்குதலின் ஒருபகுதியாக விழுப்புரம், விக்கிரவாண்டி தாலுகாக்களில் 27 பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து, 32 பணியாளர்களுக்கு சான்றிதழ்களும், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் நடத்திய வினாடி- வினா போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவருக்கு பரிசும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்