தொழிலாளர் சேமநல நிதி நிறுவனத்தில் 577 பணியிடங்கள்

தொழிலாளர் சேமநல நிதி நிறுவனத்தில் 577 பணியிடங்களுக்கு 17-ந் தேதிக்குள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2023-03-05 18:45 GMT

அமலாக்க அதிகாரி மற்றும் கணக்கு அதிகாரி பணியிடங்கள் 418 காலியாக உள்ளன. இதில் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 57 பணியிடங்களும், பழங்குடியினருக்கு 28 பணியிடங்களும், இதரபிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 78 பணியிடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 51 பணியிடங்களும், பொது பிரிவினருக்கு 204 பணியிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சேம நலநிதிஉதவி ஆணையர் பணியிடம் 159 காலியாக உள்ளது. இதில் ஆதிதிராவிட பிரிவினருக்கு 25 பணியிடங்களும், பழங்குடியினருக்கு 12 பணியிடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 38 பணியிடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 16 பணியிடங்களும், பொது பிரிவினருக்கு 68 பணியிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு இளநிலை பட்டம், கம்பெனி சட்டம், தொழிலாளர் சட்டம், பொது நிர்வாகம் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படித்திருப்பது விருப்பத்தக்கது. எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வு சென்னை, கோவை, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் நடத்தப்படும். தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விவரங்கள் தகுதியானவர்களுக்கு அனுமதி சீட்டு மூலம் தெரிவிக்கப்படும். அனுமதி சீட்டு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.25 கட்டணம் ஸ்டேட் வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலமாக வருகிற 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் சேம நல நிதி அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்