தேனி மாவட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஓவிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

தேனி மாவட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஓவிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2022-10-07 16:47 GMT

தேனி மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின், கலை மற்றும் கற்பனை திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ஓவியம், இசை, தையல், எம்ப்ராய்டரி, கலைநுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓவிய வகுப்பு நடத்தப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றிய சிறப்பு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றனர். அதன் பின்னர் நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்காலிக ஆசியர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே தற்காலிக ஓவிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்