கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

Update: 2022-09-21 20:46 GMT

சேலம்

சேலம் கந்தம்பட்டி எட்டிமார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சின்ராஜ் (வயது 30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கோவிந்தராஜ் (32) என்பவருக்கும் இடையே பொது வழித்தடத்தில் நடந்து செல்வது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, கோவிந்தராஜ் தான் வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து சின்ராஜ் மீது சரமாரியாக குத்திக்கொல்ல முயன்றார். இதனால் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சின்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சின்ராஜ் மீது தாக்குதல் நடத்திய கோவிந்தராஜூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிறிஸ்டல் பபிதா தீர்ப்பு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்