மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் தெற்குவாணி வீதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 53). இவர் வாலாந்தரவை ஊராட்சியில் மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் ரெகுநாதபுரம் பாண்டியன் நகர் படவெட்டி வலசை கிராம சாலை பகுதியில் மின்கம்பத்தில் பீஸ் போட ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.