மோசமான வானிலை: தூத்துக்குடி - சென்னை, பெங்களூரு விமானங்கள் ரத்து

மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.;

Update:2024-12-14 15:53 IST
மோசமான வானிலை: தூத்துக்குடி - சென்னை, பெங்களூரு விமானங்கள் ரத்து

கோப்புப்படம்

தூத்துக்குடி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலைய ஓடுதளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் மோசமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கு இடையே இயக்கப்படும் அனைத்து விமானங்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்