இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நாளை உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே நகரும் என கூறப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் என தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.