வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கரூர் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார். இதையடுத்து அவரது உடல் 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

Update: 2023-09-13 19:12 GMT

வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளி

நொய்யல் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 65). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் புகழூர் வாய்க்கால் படிக்கடியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அர்ஜுனன் வாய்க்காலில் மூழ்கி இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையஅலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாய்க்காலில் இறங்கி அர்ஜுனனை தேடினர். இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

பிணமாக மீட்பு

இதையடுத்து நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் நொய்யல் முதல் முனிநாதபுரம் வரை புகழூர் வாய்க்காலுக்குள் படகு மூலம் சென்று அர்ஜுனனை இரு கரையிலும் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது முனிநாதபுரம் பகுதியில் வாய்க்காலில் அர்ஜுனன் பிணமாக மிதந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து கோம்புப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் அவரது முன்னிலையில் அர்ஜுனனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்